செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 20 மே 2018 (13:12 IST)

15 நாட்கள் தேவையில்லை ; மெஜாரிட்டியை உடனே நிரூபிப்பேன் - குமாரசாமி அதிரடி

முதல்வராக பதவியேற்ற உடன் எனக்குள்ள பெரும்பான்மையை நிரூபிப்பேன் என மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

 
கர்நாடகத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா தனது முதலமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். 
 
இதனையடுத்து கர்நாடக ஆளுனர் வஜூபாய் வாலா குமாரசாமியை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார். இதன்படி நேற்று இரவு 7.30 மணிக்கு ஆளுனர் வஜூபாய் வாலாவை குமாரசாமி சந்தித்தார். அதன்படி கர்நாடக மாநில புதிய முதலமைச்சராக  21-ந் தேதி(நாளை) பதவியேற்க உள்ளதாக குமாரசாமி தெரிவித்தார். அதோடு, மெஜாரிட்டியை நிரூபிக்க ஆளுநர் 15 நாட்கள் அவகாசம் கொடுத்தார். ஆனால், எனக்கு அவ்வளவு நாட்கள் தேவையில்லை. முதல்வராக பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் என் பலத்தை நிரூபிப்பேன் என அவர் தெரிவித்தார்.