செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (19:48 IST)

ஸ்டாலின் இதை செய்தாலே எங்களுக்கு பெரிய பாராட்டுதான்: முதல்வர் பழனிச்சாமி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சமீபத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆயிரக்கணக்கான கோடி மதிப்பில் தொழில் துவங்க முதலீடுகளை பெற்று வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். இது குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், ’திமுக காலத்தில் எத்தனை வெள்ளை அறிக்கை வெளியானது என்பதை முக ஸ்டாலின் விளக்க வேண்டும் என்று கூறினார் 
 
 
மேலும் தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக எந்த முதல்வரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள வில்லை என்றும், நான் வெளிநாட்டுக்கு சென்ற போது நீங்கள் தான் நீண்ட இடைவெளிக்குப் பின் வரும் தமிழக முதல்வர் என்பதால் தங்களுக்கு மகிழ்ச்சி என்று வெளிநாட்டு தொழிலதிபர்கள் தெரிவித்ததோடு, மகிழ்ச்சியுடன் தொழில் தொடங்வும் முன்வந்ததாகவும் முதல்வர் குறிப்பிட்டார்
 
 
மேலும் திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய் என்றும், தமிழகத்தில் 29 தொழில்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளதாகவும், சில பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது ஐந்து ஆண்டு கால அவகாசம் ம் தேவைப்படும் என்றும் அவர் விளக்கினார் 
 
 
வெள்ளை அறிக்கை வெளியிட்டால் திமுக தலைவர் பாராட்டு விழா நடத்துவதாக கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதல்வர் திமுக எங்களை பாராட்ட வேண்டிய அவசியமில்லை என்றும், அவர்களுக்கு பாராட்ட மனம் இருக்காது என்றும், எங்களை அவர்கள் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே அதுவே எங்களுக்கு பெரிய பாராட்டு என்றும் முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்