விஜயபாஸ்கருக்கு மானம் இருக்கிறதா? ஸ்டாலின் காட்டம்!!
திமுக செயல் தலைவர் ஸ்டாலின் அதிமுக அமைச்சர் விஜய பாஸ்கரை கடுமையாக விமர்சித்து உள்ளார்.
டெங்கு விழிப்புணர்வு பிரசார வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை சென்னை பெரம்பூரில் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது, எடப்பாடி தலைமையிலான ஆட்சி இன்றோ, நாளையோ கவிழலாம். விஜயபாஸ்கர் குட்கா பாஸ்கராக மாறி தற்போது டெங்கு பாஸ்கர் ஆகிவிட்டார்.
நயவஞ்சகத்தின் மறு உருவம் அமைச்சர் விஜயபாஸ்கர். எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நான் எனது பணியை செய்து வருகிறேன்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழா என்ற பெயரில் அரசியல் பேசுவது கண்டனத்துக்குரியது. அவர் இன்னும் குட்கா விவகாரத்தில் மானநஷ்ட வழக்கு போடாதது ஏன்? அவருக்கு மானமிருந்தால் என் மீது வழக்கு போட வேண்டும் என்று காட்டமாய் விமர்சித்துள்ளார்.