செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (10:13 IST)

மீண்டும் நமக்கு நாமே பயணம்: தயாராகும் ஸ்டாலின்!

மீண்டும் நமக்கு நாமே பயணம்: தயாராகும் ஸ்டாலின்!

கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்னர் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் நமக்கு நாமே பயணத்தை ஆரம்பித்தார். இந்த பயண திட்டத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இதனை பின்பற்ற உள்ளதாக தகவல்கள் வருகின்றன.


 
 
தற்போது உள்ள தமிழக அரசு எவ்வளவு நாள் நீடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கலையலாம் என்ற நிலையிலேயே உள்ளனர். இதனால் எந்த நேரத்திலும் தேர்தல் வரலாம் என்பதால் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீண்டும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
இந்த முறை இந்த பயணத்திட்டத்துக்கு யாத்திரை என பெயர் வைக்கலாம என்ற விவாதம் போய்க்கொண்டு இருக்கிறது. கன்னியாக்குமரி, திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, சேலம், தர்மபுரி, வேலூர், சென்னை என இந்த பயணத்தின் ரூட் இருக்கும் என கூறப்படுகிறது.
 
இந்த பயணத்தின் போது ஆங்காங்கே ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் பேசுவார் என கூறப்படுகிறது. விரைவில் இந்த புதிய நமக்கு நாமே பயணத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.