நடராஜன் மீது நடவடிக்கை; ஸ்டாலினுக்கு காழ்ப்புணர்ச்சி: போட்டு தாக்கும் ஜெயக்குமார்!!
அமைச்சர் ஜெயகுமார் சென்னை அடையாறில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது நடராஜன் மற்றும் ஸ்டாலினை தாக்கி பேசினார்.
டெங்கு காய்ச்சலை தடுக்க, தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டு வருதாகவும், டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர் ஸ்டாலின் மீதும் குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார்.
அரசை கலைக்க வேண்டும், இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்ற நோக்கத்திலேயே ஸ்டாலின் இருப்பதாகவும் அரசின் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாகவே ஸ்டாலின் இவ்வாறு பேசுகிறார் என கூறியுள்ளார்.
அதோடு சேர்த்து, நடராஜன் விவகாரத்தில் உறுப்பு மாற்று விதி மீறப்பட்டிருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சட்டப்படிதான் உறுப்பு தானங்கள் நடைபெற வேண்டும். சட்டத்தின் முன்பு அனைவரும் சமம் என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.