1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Stalin condemned for students arrest at Chennai

கோலம் போட்ட மாணவிகளை கைது செய்வதா? முக ஸ்டாலின் கண்டனம்

ஸ்டாலின்
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மாணவ மாணவிகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பல்வேறு விதமாக போராட்டம் நடத்திவருகின்றனர் என்பது தெரிந்ததே. இதனை அடுத்து கல்லூரிகள் ஜனவரி 2ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் பகுதியில் ஒரு சில மாணவிகள் குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வாசகங்களுடன் கூடிய கோலங்களை போட்டனர். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து அங்கு விரைந்த போலீசார் கோலம் போட்ட மாணவ மாணவிகளை கைது செய்து அதன்பின் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்தனர்
 
இந்த கைது நடவடிக்கையை சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கோலம் போட்ட மாணவிகள் கைது செய்யப்பட்டது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் வைத்துள்ளார் அவர் கூறியதாவது:
 
அலங்கோல அதிமுக அரசின் அராஜகம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சென்னை பெசண்ட் நகரில் #CAA வுக்கு கோலம் வரைந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்திய, 6 பேரை அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளைக்கூட அனுமதிக்காத இந்தத் தரங்கெட்ட எடப்பாடி அரசின் காவல்துறை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும். அவர்கள் மீதான வழக்கும் திரும்பப் பெறப்பட வேண்டும். மண்புழு அரசு மனித உரிமைகளை மதிக்க வேண்டும்! 
அடுத்த கட்டுரையில்
முதல்வர் கண்ணியத்தை இழந்து பேசுகிறார் - ஆளுநர் கிரண்பேடி குற்றச்சாட்டு !