1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 11 மார்ச் 2021 (10:58 IST)

கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்த ஸ்டாலின்

தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சி தலைவர் இன்னொரு அரசியல் கட்சி தலைவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் சொல்வது வழக்கமான ஒன்றாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருகிறது 
 
அந்த வகையில் சற்று முன் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி திமுக தலைவர் ஸ்டாலின் மீது தனிமனித விமர்சனத்தை கமல்ஹாசன் செய்ததாக அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது
 
இந்த புகாரின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் கமல்ஹாசன் மீது என்ன நடவடிக்கை எடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சமீபத்தில் மக்கள் நீதி மய்யம் கூட்டம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன் ’கருணாநிதியை அவமானப்படுத்த வேண்டும் என்றால் ஸ்டாலின் என்று கூறினாலே போதும்’ என்று தெரிவித்திருந்தார்.  இதனடிப்படையில்தான் முக ஸ்டாலின் இந்த புகாரை அளித்துள்ளதாக தெரிகிறது