மம்தா மீது தாக்குதல் : ஸ்டாலின் ஆவேச ட்விட்!!
மம்தா மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டன தெரிவித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின்.
மேற்கு வங்கத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கட்சிகள் தேர்தலுக்காக பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் கடந்த முறை பவானிப்பூர் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பேனர்ஜி சுவேந்து அதிகாரியின் சவாலை ஏற்று அவரை எதிர்த்து போட்டியிட நந்திகிராம் தொகுதியை தேர்வு செய்துள்ளார்.
இதனால் அங்கு வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு பரப்புரையை மேற்கொண்டார். பின்னர் தனது காருக்கு திரும்பும் நேரத்தில் காவலர்கள் பக்கத்தில் இல்லாத நேரம் பார்த்து அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதோடு முதுகிலும் அதிக வலி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து புகாரும் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், மம்தா மீது தாக்குதல் நடத்திய குற்றத்தை செய்தவர்கள் உடனடியாக நீதிக்கும் முன் கொண்டுவரப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், மம்தா விரைவாக நலம்பெற வேண்டும் என விரும்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.