1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 10 மார்ச் 2021 (16:00 IST)

தேமுதிகவுக்கு மீண்டும் முரசு சின்னம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

தேர்தல் ஆணையம் மீண்டும் முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த தேமுதிக கடந்த சில நாட்களாக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் இவர்கள் கேட்பதும் அவர்கள் கொடுப்பதாக சொல்வதுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருப்பதால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தது.

இது தேமுதிக தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் இப்போது ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தேமுதிகவுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேர்தல் ஆணையம் மீண்டும் முரசு சின்னத்தை ஒதுக்கியுள்ளது.