செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By

ஸ்டாலின் மற்றும் உதயநிதியிடம் இன்று நேர்காணல்!

திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் விருப்பமனுக்கள் அளித்துள்ள நிலையில் இன்று அவர்களிடம் நேர்காணல் நடக்க உள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம்.

திமுக விருப்பமனு அளித்தவர்களிடம் எல்லாம் நேர்காணல் செய்து வருகிறது. இந்நிலையில் இன்று திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோரிடம் நேர்காணல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதிக்கும், உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய தொகுதிகளில் போட்டியிட விண்ணப்பித்துள்ளார்.