1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 14 மார்ச் 2021 (07:24 IST)

முதல்வருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார்: ஸ்டாலின்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அதிமுக திமுக ஆகிய இரு தரப்பிலும் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஸ்டாலின் என்னுடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என முதல்வர் பழனிசாமி அவர்கள் சவால் விடுத்திருந்தார். இந்த சவாலை தற்போது ஸ்டாலின் ஏற்றுக்கொண்டுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் தன் மீதான வழக்குக்கு முதல்வர் பெற்ற தடையை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவ்வாறு அவர் வாபஸ் பெற்றால் அவருடன் விவாதம் நடத்த தயார் என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். நேற்று இந்தியாடுடே நடத்திய ஒரு நிகழ்ச்சியில் ஸ்டாலின் இந்த இதனை தெரிவித்துள்ளார் 
 
ஸ்டாலினின் இந்த நிபந்தனையை ஏற்று முதல்வர் தடையை வாபஸ் பெற்று விவாதத்தில் கலந்து கொள்வாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அமெரிக்க அதிபர் தேர்தலின் போது அதிபர் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதம் செய்யும் காட்சி தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பி பரபரப்பி பரபரப்பை ஏற்படுத்தும்,. அதே போன்ற ஒரு நிகழ்வு தமிழகத்திலும் நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்