திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 13 மார்ச் 2021 (16:21 IST)

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – திமுக ஆதரவு

பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நாட்டில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சி நடைபெற்றுவருகிறது.

சமீபத்தில் மத்திய அமைச்சர் சீதாராமன் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதாக அறிவித்தார். இதற்கு நாடு முழுவதிலும் உள்ள பொதுத்துறைவங்கி ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளைத் தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 15 மற்றும் 16ல் நடைபெறும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு திமுக ஆதரவு என அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.