திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 16 அக்டோபர் 2021 (21:41 IST)

அம்மா உணவகத்தில் ஊழியர்கள் போராட்டம்

அம்மா உணவகத்தில் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவது   பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் அம்மா உணவகம் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டது. அனைத்து மாவட்டங்களில் உள்ள முக்கிய பகுதிகளில் அம்மா உணவகம் இயங்கி வருகிற்து. தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் அம்மா உணவகம் என்ற பெயரிலேயே செயல்படுகிறது. இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கு சாலை நீலாங்கரையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் ஊழியர்கள் 25 பேர் பணிபுரிகின்றனர்.  சமீபத்தில், ஊழியர்களில் 12 பேரை  ஒருநாள் விட்டு ஒருநாள்  பணிபுரியுமாறும், அடுத்த 12 பேர் மற்றுநாள் பணிபுரியுமாறு அதிகாரிகல் கூறியதாகத் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தினம் தோறும் தங்களை பணி செய்யும் நடைமுறைக்கு வரக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.