கம்ப்யூட்டரிலும் 11,12ஆம் வகுப்பு தேர்வுகள் எழுதலாம்
சி.பி.எஸ்.இ பள்ளிகளில் நடைபெறும் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை மாணவர்கள் விரும்பினால் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்ப்பில் டைப் அடித்து எழுதலாம் என்ற புதிய வசதியை சோதனை முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கல்வியாண்டு முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் இதற்கு ஒருசில நிபந்தனைகளும் உண்டு. கம்ப்யூட்டரில் டைப் அடித்து தேர்வு எழுதுபவர்கள் டாக்டர் சர்டிபிகேட் பெற்று வர வேண்டும். மேலும் மாணவர்களே கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கொண்டு வர வேண்டும்
கம்ப்யூட்டரில் இண்டர்நெட் இணைப்புக்கு அனுமதி இல்லை. மாணவர்கள் கொண்டு வரும் கம்ப்யூட்டரை முதலில் தேர்வு அதிகாரி சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார். கம்ப்யூட்டரில் தேர்வு எழுத முன்கூட்டியே தேர்வு அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். மேலும் இந்த வசதியை பெற ஒரு மாணவரின் வருகைப்பதிவு 50%க்கு மேல் இருக்க வேண்டும். இருப்பினும் இந்த வசதி ஒருசில குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.