திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 மார்ச் 2018 (17:28 IST)

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாக இருந்த நிலையில் சற்றுமுன் வெளியான அறிவிப்பின்படி  நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மார்ச் 12ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு முதல் மெடிக்கல் படிக்கும் மாணவர்கள் அகில இந்திய அளவில் வைக்கப்படும் நீட் தேர்வை கட்டாயம் எழுத வேண்டும் என்று மத்திய அரசு உறுதிபட கூறிவிட்டது. இதனையடுத்து இந்த ஆண்டு நீட் தேர்வு மே மாதம் 6-ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும், இந்த தேர்வை எழுதும் மாணவர்கள் ஆன்லைனில் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் மார்ச் 9-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனவே விண்ணப்பிக்க நாளைதான் கடைசி தினம் என்ற நிலையில் தற்போது இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க மூன்று நாட்கள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளாது. எனவே வரும் 12ஆம் தேதி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கால நீட்டிப்பு காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.