திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 26 செப்டம்பர் 2022 (21:39 IST)

கியூட் தேர்வு முடிவுகளை வெளியிட்ட தேர்வு முகமை

மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகள் படிப்பதற்கான கியூட் நுழைவு தேர்வு சமீபத்தில் நடந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் இன்று  வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை படிப்பு படிக்க கியூட்  தேர்வினை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. 2022ஆம் ஆண்டுக்கான கியூட்  நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் மாதம் நடந்த நிலையில் இந்த தேர்வை ஏராளமான மாணவர்கள் எழுதினர்

இந்த நிலையில் கியூட் தேர்வு முடிந்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் கடந்த 16ஆம் தேதி  இளங்கலை தேர்வு முடிவுகளை தேர்வு  முகமாய் முடிவுகள் வெளியிட்டது.

இந்த நிலையில் முது நிலை படிப்புக்கான கியூட் தேர்வை மொத்தம் 6.07 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இந்த கியூட் முதுகலை முடிவுகளை தேசிய தேர்வு முகமை இன்று மாலை வெளியிட்டுள்ளது.  இணையததளத்தில் சென்று முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.