திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 அக்டோபர் 2017 (15:14 IST)

ரஜினி, கமல், அஜித், விஜய் ரசிகர்களுக்கு ஆப்பு வைத்த சென்னை ஐகோர்ட்

ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது அவர்களுடைய ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு 100 அடி, 150 அடி உயர பேனர்கள் வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். ஆனால் இன்று சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு காரணமாக இனிமேல் யாரும் பேனர்கள் வைக்க முடியாது.



 
 
இன்று பேனர்கள் குறித்த வழக்கு ஒன்றினை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட், இனிமேல் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இந்த விஷயத்தில் தலைமைச்செயலாளர் கண்காணிப்பாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
 
இந்த உத்தரவால் அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மட்டுமின்றி உச்ச நடிகர்களின் ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.