வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (08:07 IST)

இடிந்து விழுந்த ஸ்ரீரங்கம் கோயிலின் கோபுரத்தின் ஒரு பகுதி!

தமிழகத்தின் ஆன்மிக அடையாளங்களில் ஒன்று ஸ்ரீரங்கம் கோயில். அதன் கிழக்கு வாசலில் கோபுரத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. நள்ளிரவு நேரத்தில் இது நடந்ததால் வேறு எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

கிழக்கு கோபுரத்தில் ஏற்கனவே விரிசல் விழுந்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வானது இப்போது பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.