வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 31 ஜூலை 2023 (17:25 IST)

நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஆளுங்கட்சி எம்பிக்களே: திமுக எம்பி திருச்சி சிவா

Trichy Siva
நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபடுவது ஆளுங்கட்சி எம்பிக்கள் தான் என திமுக எம்பி திருச்சி சிவா டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். 
 
கடந்த ஒரு வாரமாக மணிப்பூர் விவகாரம் காரணமாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி செய்து வருவதால் பாராளுமன்ற நடவடிக்கைகள் பாதித்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில்  நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி எம்பிக்கள் தான் அமளியில் ஈடுபடுகின்றனர் என்றும் சபாநாயகர் எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதித்தாலும் ஆளுங்கட்சி எம்பிக்கள் பேச விடுவதில்லை என்றும்  திமுக எம்பி திருச்சி சிவா பேட்டி அளித்துள்ளார். 
 
மேலும் பிரதமர் அவைக்கு வந்து பதில் தர வேண்டும் என கேட்பது நியாயமான கோரிக்கை என்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு பிரதமரோ ஆளும் அரசோ மரியாதை தருவதில்லை என்றும் அவர் குற்றச்சாட்டியுள்ளார்.
 
Edited by Siva