செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 26 பிப்ரவரி 2023 (14:34 IST)

தமிழக மீனவர்களை கடலில் தள்ளிய இலங்கை கடற்படை.. நடுக்கடலில் நடந்த அட்டூழியம்..!

fishermen
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் கடலில் தள்ளியதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடைப்படையினர் தாக்கி வருகின்றனர் என்பதும் கைது செய்து வருகின்றனர் என்பதும் தொடர்கதையாக உள்ளது. இலங்கை கடற்படையினர் ஏராளமான தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் வாடுகின்றனர் என்பது அது மட்டும் இன்றி இலங்கை கடற்படையினர்களின் ப்பாக்கி சூட்டுக்கு பல தமிழக மீனவர்கள் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் காரைக்காலில் இருந்து மீன்பிடிக்க சென்ற காரைக்கால் மற்றும் மயிலாடுதுறை மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் இன்று தாக்குதல் நடத்தியுள்ளனர். 
 
11 மீனவர்கள் படகில் இருந்த நிலையில் 7 பேரை கடலில் தள்ளியதாகவும் நான்கு பேர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. மேலும் படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி வலைகளையும் இலங்கை கடற்படையினர் எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மீனவர் சங்கத்தின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
 
Edited by Siva