1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (23:34 IST)

இலங்கையில் உள்ளாட்சித் தேர்தல் தள்ளி வைப்பு- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

Srilanka
இலங்கை வரும் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இலங்கை நாட்டின் முந்தைய ஆட்சியில் பொருளாதா நெருக்கடியால், அட்தியாவசிய பொருட்கள் விலை விண்ணை முட்டியது. இதனால், மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, புரட்சியில் குதித்தனர். இதனையடுத்து, இந்தியயா, சீனா, உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு நிதி உதவி மற்றும் பொருளுதவி செய்தன.

ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார்.

இந்த நிலையில், இலங்கையில், வரும் மார்ச் 9 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிப்புகள் வெளியானது.

ஆனால், நிதி பற்றாக்குறையின் காரணமாக உள்ளாட்சி தேர்தல் தள்ளி வைக்கப்படும் எனத் தகவல் வெளியானது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த இந்நிலையில், அடுத்த மாதம் தேர்தல் நடக்கவுள்ள தேர்தல் நடத்துவது கடினம் எனக் கூறியதை அடுத்து, இன்று தேர்தல் ஆணையம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், வரும் 3 ஆம் தேதி  நடக்கவுள்ள உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பதாக தெரிவித்துள்ளனர்.