1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 அக்டோபர் 2022 (20:17 IST)

இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: சீமான்

Seeman
தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் சீமான் தெரிவித்துள்ளார் 
 
இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு எதிராக தமிழக மீனவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தொலைத்து ஒவ்வொரு நாளும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது இந்திய கடற்படையும் தமிழ்நாடு மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது அவர்களை வாழவே முடியாத அளவிற்கு அழித்தொழிக்கும் கொடும் செயலாகும் 
 
தமிழ்நாடு மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்
 
மேலும் 50 லட்சம் துயர்துடைப்பு நிதியாக சுடப்பட்ட மீனவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva