சென்னையில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தில் திடீர் கோளாறு: பெரும் பரபரப்பு

Last Modified வெள்ளி, 30 நவம்பர் 2018 (10:08 IST)
சென்னையிலிருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு இன்று காலை 59 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்களுடன் புறப்பட்டு சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த விமானம் அவசரமாக மீண்டும் சென்னைக்கு திரும்பி அனுப்பப்பட்டது.

இந்த விமானத்தில் பயணம் செய்த 63 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும், 59 பயணிகளும் விமானத்திலிருந்து பத்திரமாக இறக்கப்பட்டு, ஒய்வு அறையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திட்கள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த பயணிகளுக்கு மாற்று விமானம் விரைவில் ஏற்பாடு செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும் ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு குறித்து விசாரணை செய்யப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த சம்பவத்தால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


இதில் மேலும் படிக்கவும் :