புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 30 நவம்பர் 2018 (09:48 IST)

தலைக்கு தில்ல பாத்தியா!!! போலீஸ்கிட்ட திருட்டு வண்டியை தள்ள சொன்ன திருடன்

சென்னையில் திருடன் ஒருவர் போலீஸாரிடன் திருட்டு வண்டியை தள்ள சொல்லி மாட்டிய சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை புழல் சிறைக்கு அருகே மஃப்டியில் இருந்த இரண்டு போலீஸார் நேற்று அதிகாலை டீக்கடையில் நின்று டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
 
அப்போது பாலக்கிருஷ்ணன் என்பவன் ஓட்டி வந்த ஆம்னி வேன், டீக்கடைக்கு அருகே நின்றுவிட்டது. பாலக்கிருஷ்ணன் அங்கிருந்தது போலீஸ் என தெரியாமல் அந்த வண்டியை அவர்களிடம் தள்ள சொன்னான். போலீஸாரும் வண்டியை தள்ள முற்பட்டனர். அப்போது வண்டியில் சாவி இல்லாததும், காரின் முன் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்ததையும் பார்த்த போலீஸார், பாலக்கிருஷ்ணனை பிடித்து விசாரித்தனர். அதில் அவன் ஓட்டி வந்தது திருட்டு வண்டி என தெரியவந்தது.
 
இதையடுத்து போலீஸார் அவனை கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.