புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 29 நவம்பர் 2018 (14:30 IST)

உல்லாசத்திற்கு அடிமையான கணவன்: கணவனை பழிதீர்க்க மனைவி செய்த வெறிச்செயல்

சென்னையில் கணவன் கள்ளக்காதலில் ஈடுபட்டதால் பெண் ஒருவர் தனது 20 நாள் குழந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை காசிமேட்டை சேர்ந்தவர் சத்யராஜ். இவரது மனைவி செலஸ்டின். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. 
 
இந்நிலையில் சத்யராஜ் வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பில் இருந்தது செலஸ்டினுக்கு தெரியவந்தது. இதனால் கணவன் மனைவிக்கிடையே கடுமையான சண்டை ஏற்பட்டது. சத்யராஜ் மீது ஆத்திரத்தில் இருந்த செலஸ்டின் அந்த பிஞ்சுக் குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்தார்.
 
பின்னர் குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறி இறந்துவிட்டது என கதையளந்தார். 
 
இதுசம்மந்தமாக போலீஸார் விசாரணை நடத்தியதில் அனைத்து உண்மைகளும் வெளிச்சத்திற்கு வந்தது. இதையடுத்து போலீஸார் அந்த பெண்ணை கைது செய்தனர். இவர்களுக்குள் நடைபெற்ற இந்த பிரச்சனையில் அந்த பிஞ்சுக் குழந்தை என்ன செய்தது? இவர்கள் மாதிரியான ஆட்கள் எப்போது திருந்தப் போகிறார்கள்?