வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (21:05 IST)

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு ரயில்கள்; தெற்கு ரயில்வே அறிவிப்பு

Train
தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் சிறப்பு ரயில்களை தென்னிந்திய ரயில்வே இயக்கி வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் வரும் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட இருக்கும் நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னை தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி நாகர்கோவில் ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய ரயில்வே தெரிவித்துள்ளது
 
இந்த சிறப்பு ரயிலை சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran