தொடர்புடைய செய்திகள்
- ”எனக்கு கள்ளகாதலன் தான் வேண்டும்,கணவர் வேண்டாம்” அண்ணன் முறை உறவினருடன் ஓடிய இளம்பெண்
- போராட்டம் நடத்திய அர்ச்சகர்கள்- அத்திவரதர் தரிசனம் நிறுத்தம்
- உள்ளாட்சித் தேர்தல் தேதி அக்டோபரில் அறிவிப்பு: தேர்தல் ஆணையம்
- வேலூரில் இருந்து 25 லட்சம் லிட்டர் தண்ணீர் மட்டுமே வருகிறது – ரயில்வேத் துறை அலட்சியம் !
- அத்திவரதரின் விஐபி லிஸ்ட்டில் பிரபல ரவுடி..பக்தர்கள் கொந்தளிப்பு
அத்திவரதர் பக்தர்களுக்கு ஓர் இனிய செய்தி…
அத்திவரதரின் தரிசனத்தை பெற சென்னையிலிருந்து காஞ்சிபுரத்துக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் கடந்த ஜுலை 1 ஆம் தேதியிலிருந்து அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சித் தந்து வருகிறார். இந்நிலையில் அத்திவரதரை தரிசிக்க இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வருகை புரிகிறார்கள். இதனைத் தொடர்ந்து தற்போது, அத்திவரதரை தரிசிக்க சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
அதாவது, செங்கல்பட்டு- காஞ்சிபுரம் இடையே மாலை 5.30 மணிக்கும், காஞ்சிபுரம்- சென்னை கடற்கரை இடையே இரவு 7.45 மணிக்கும் இயக்கப்பட்ட சிறப்பு மின்சார ரயில் ரத்து செய்யப்படும் எனவும், அதற்கு பதிலாக செங்கல்பட்டு-கடற்கரை இடையே சிறப்பு மின்சார ரயில் இயக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது. இந்த ரயில் செங்கல்பட்டிலிருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் எனவும் கூறப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
