1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (20:36 IST)

கோவைக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் நியமனம்!

கோவைக்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர் நியமனம்!
கோவை மாவட்டத்தில் தேர்தல் தில்லுமுல்லுகள் நடப்பதாக அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ள நிலையில் கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளர்கள் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது
 
கோவை மாவட்டத்திற்கு சிறப்பு தேர்தல் கண்காணிப்பாளராக நாகராஜன் என்பவரை நியமித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
 
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போதும் சிறப்பு பார்வையாளராக கோவைக்கு நாகராஜன் நியமனம் செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.