வராத பயணிகள்... பேருந்து வரத்தை குறைக்க முடியாது!

Sugapriya Prakash| Last Modified புதன், 13 ஜனவரி 2021 (14:38 IST)
பேருந்துகளை சற்று குறைந்த அளவில் இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 

 
தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்தது. 
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னையிலிருந்து சுமார் 5000 பேருந்துகள் இயக்கப்பட இருந்தது. 
 
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் பேருந்துகளை சற்று குறைந்த அளவில் இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :