திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (11:06 IST)

சென்னையில் இன்று முதல் 3 நாட்களுக்கு 24 மணி நேர பேருந்து சேவை!

தமிழர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் பொங்கல் பண்டிகையை அடுத்து சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை அடுத்து இன்று முதல் நாளை மறுநாள் வரை 24 மணி நேரமும் சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது 
 
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்புப் பேருந்துகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து சுமார் 5000 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 310 சிறப்பு பேருந்துகளை மாநகராட்சி இயக்க உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது 
 
அதுமட்டுமன்றி இன்று முதல் நாளை மறுநாள் வரை அதாவது 13-ஆம் தேதி நள்ளிரவு வரை 24 மணி நேரமும் சென்னையில் இருந்து சென்னை மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது. இதன் காரணமாக சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் பேருந்துகளுக்கு செல்வது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பேருந்து சேவையை பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது