1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (19:34 IST)

தினகரனிடம் கோரிக்கை வைத்த சபாநாயகர் தனபால்!

ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற டிடிவி தினகரன் இன்று சபாநாயகர் அறையில் ஆர்கே நகர் சட்டசபை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். இதனை அவரது ஆதரவாளர்கள் அமோகமாக கொண்டாடினர்.
 
தினகரன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி ஆர்கே நகர் தேர்தல் வெற்றி. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் அவரது ஆதரவாளர்கள் இந்த பதவியேற்பு விழாவை அமோகப்படுத்தினார்கள். வழி நெடுகிலும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
டிடிவி தினகரன் சபாநாயகர் அறையில் பதவியேற்றுக் கொண்டதும் அவரது ஆதரவாளர்கள், வருங்கால முதல்வர் டிடிவி தினகரன் வாழ்க என கோஷமிட்டனர். இந்த கோஷம் அறையையும் தாண்டி வெளியே கேட்டது. இதனால் என்ன செய்வதென்பது புரியாமல் இருந்தார் சபாநாயகர் தனபால்.
 
இதனையடுத்து சபாநாயகர் தனபால், இங்கே இப்படியெல்லாம் கத்தக்கூடாதுன்னு சொல்லுங்க என தினகரனிடம் கோரிக்கை வைத்தார். அதனை கேட்டு சிரித்தபடியே அமைதியாக இருங்க என கையை வைத்து சைகை காட்டினார் தினகரன்.