1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 29 டிசம்பர் 2017 (15:16 IST)

விவசாயிகளை அரசு தான் மதிக்கவில்லை என்றால் அரசு அதிகாரியுமா?

தூத்துக்குடியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயிர்க்காப்பீட்டு இழப்பீடு கோரி முற்றுகையிட்ட விவசாயிகளுக்கு பதிலளிக்க முடியாமல் கலெக்டர் எழுந்து வெளியில் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நம் நாட்டின் முதுகெலும்பே விவசாயிகள் தான். பெயருக்கு தான் முதுகெழும்பு, ஆனால் அவர்கள் படும் பாட்டை சொல்லி மாலாது. எமது விவசாயிகள் டெல்லியில் 100 நாள் வந்து போராடினர். மத்திய அரசுக்கு ஒரு நாள் கூட வந்து  விவசாயிகளை பார்க்க நேரமில்லை. அது ஏன் இருக்கப்போகிறது, உமக்கு தான் அனுஷ்காவின் திருமண வரவேற்பிற்கும், வெளிநாடுகளுக்கும் பறந்து செல்லவுமே நேரம் சரியாய் போகிறது. மாநில அரசே விவசாயிகளை மதிக்கவில்லை, மத்திய அரசு எப்படி மதிக்கப் போகிறது. 
 
இன்றைய தினம் தூத்துக்குடியில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 2015 - 2016 ஆம் ஆண்டில் மானாவரி பயிர் சாகுபடியில் போதிய விளைச்சல் இல்லாமல் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பலருக்கு பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இழப்பீடு வழங்கவில்லை என புகார் அளித்தனர். விவசாயிகள் விரைவில் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டுமென தரையில் மண்டியிட்டு கலெக்டரை வேண்டினர்.
இதையடுத்து கலெக்டர் வெங்கடேஷ் பதில் எதுவும் தெரிவிக்காமல் எழுந்து சென்றார். இதனால் விவசாயிகள் கோஷம் எழுப்பினர். மீண்டும் உள்ளே வந்த கலெக்டர் இழப்பீடு வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.