ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 18 அக்டோபர் 2022 (10:59 IST)

பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்களுக்கு சட்டப்பேரவையில் தடை !!!

சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பங்கேற்க இன்று ஒரு நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.


அதிமுக தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே மோதல் நிலவி வருகிறது. கடந்த ஜூலை மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியை விட்டு நீக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சமீபத்தில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என நீதிமன்றம் அறிவித்தது.

இந்நிலையில் நேற்று நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையில் ஓபிஎஸ் அமரக்கூடாது என்று எடப்பாடி பழனிசாமி சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் அனுப்பி இருந்தார்.

ஆனால் சட்டசபையில் இருக்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி இருக்கை அருகில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கையிலேயே ஓபிஎஸ் அமர்ந்தார். இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில்  இன்று தமிழ்நாடு 2 ஆம் நாள் சட்டசபை மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இன்று அவைக்கு வந்தார் எடப்பாடி பழனிசாமி,  ஓ.பன்னீர் செல்வம் அருகே அமர்ந்தார்.  இருக்கை தொடர்பாக முடிவெடுக்கக்கோரி சட்டசபை கூட்டம் தொடங்கியதுமே அதிமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

முதலில் மக்கள் பிரச்சினை குறித்து பேச அனுமதியுங்கள் பிறகு நேரம் தருகிறேன் உங்கள் கேள்வியை எழுப்புங்கள் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் சபாநாயகர் அப்பாவு கேட்டு கொண்டார். ஆனால் இதனை ஏற்காமல் ஈபிஎஸ் தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்களை சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவு.

அதோடு சட்டப்பேரவை நிகழ்வுகளில் பழனிசாமி தரப்பு எம்.எல்.ஏக்கள் பங்கேற்க இன்று ஒரு நாள் தடை விதிக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

Edited By: Sugapriya Prakash