திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 17 அக்டோபர் 2022 (10:14 IST)

சட்டப்பேரவை கூட்டத்தை பழனிசாமி அணியினர் புறக்கணித்த ஈபிஎஸ்: இந்த ஒரே காரணம் தான்!

Edappadi
இன்று தொடங்கிய சட்டசபை கூட்டத்தை அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அணி புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சட்டசபை இன்று கூடிய நிலையில் அனைத்து எம்.எல்.ஏக்களும் இன்று சட்டசபையில் கூடினர். இந்த நிலையில் சட்டப்பேரவை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி அணியினர் இன்று புறக்கணித்ததாக தகவல் வெளியாகி உள்ளன
 
இன்று நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூடத்தில் வேலுமணி மட்டும் சட்டசபை கூட்டத்தில் பங்கேற்பார் என கூறப்படுகிறது. எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவியை ஓ பன்னீர்செல்வம் அவர்களிடம் இருந்து பறிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
 
இந்த நிலையில் அவரது பதவி பறிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை அடுத்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சட்டசபையை புறக்கணித்ததாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
Edited by Siva