வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வியாழன், 6 ஏப்ரல் 2023 (12:42 IST)

இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது: வேல்முருகன் எம்.எல்.ஏவை எச்சரித்த சபாநாயகர்..!

இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது என தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு சபாநாயகர் அப்பாவு எச்சரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
இன்று சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் அமைச்சரை பேசுவதற்காக சபாநாயகர் அப்பாவு அழைத்தார். அப்போது தமிழர் வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தன்னை துணை கேள்வி கேட்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் 
 
துணைக் கேள்வி கேட்க யாரை அனுமதிக்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என்று நீங்கள் உட்காருங்கள் என்றும் சபாநாயகர் கூறினார். இதனை அடுத்து மீண்டும் மீண்டும் அவர் பேச வேண்டும் எனக்கூற இந்த மிரட்டல் எல்லாம் என்கிட்ட விடக்கூடாது உட்காருங்கள் என்று கடுமையாக கூறியதை அடுத்து அமைச்சரை பேசுமாறு அழைத்தார். மேலும் வேல்முருகன் பேசுவது எதுவும் அவை குறிப்பில் இடம் பெறாது என்றும் அவர் தெரிவித்தார் 
 
திமுக கூட்டணியில் வேல்முருகனின் தமிழர் வாழ்வுரிமை கட்சி இருக்கும் நிலையில் சபாநாயகர் அப்பாவு அவரிடம் கடுமையாக நடந்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Mahendran