வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 31 மார்ச் 2023 (00:22 IST)

சட்டசபையில் ஆபாச படம் பார்த்த பாஜக எம்.எல்.ஏ.. வீடியோ வைரலானதால் அதிர்ச்சி..!

திரிபுரா மாநிலத்தில் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் பாஜக எம்எல்ஏ ஒருவர் ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
திரிபுராவில் பாஜக கட்சி மூலம் முதல் முறையாக எம்எல்ஏ ஆகியிருக்கும் ஜதாப் தல் எனபவர் சட்டசபை கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஆபாச படம் பார்க்கும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. 
 
இந்த வீடியோவில் சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருப்பதும் சபாநாயகர் பேசுவதும் தெளிவாக கேட்கின்றது. மடியில் செல்போனை வைத்து ஆபாச படம் பார்க்கும் இவர் நேரம் கழித்து செல்போனை மேஜை மீது வைத்து பார்த்து ரசித்துக்கொண்டிருக்கிறார்.
 
அவ்வப்போது சபை நிகழ்ச்சிகளையும் கவனிக்கிறார். வீடியோ வைரலானது அடுத்து திரிபுரா பாஜக தலைவர் ராஜூ பட்டாச்சாரியார் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் ஜதாப் தல் என்பவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran