6 மாநிலங்களில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு
6 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
6 மாதங்களில் நடைபெறும் 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள் நவம்பர் 6ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது
மகாராஷ்டிரா, பீகார், அரியானா, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் 7 சட்டசபை தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் இந்த தொகுதிகளில் நவம்பர் 3ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த தேர்தலில் போட்டியிடுபவர்கள் அக்டோபர் 7ஆம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும் அக்டோபர் 14-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதி என்றும் அக்டோபர் 75-ஆம் தேதி வேட்பு மனுவை வாபஸ் பெற கடைசி தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
Edited by Siva