திங்கள், 4 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 12 பிப்ரவரி 2024 (11:08 IST)

ஒரு பைசா கூட தரவில்லை.. ஆளுனருக்கு சபாநாயகர் தந்த அன்பான வேண்டுகோள்..!

தமிழகத்தில் மிகப்பெரிய கனமழை மற்றும் வெள்ள சேதம் ஏற்பட்ட போதிலும் மத்திய அரசு ஒரு பைசா கூட நிதி தரவில்லை என்றும் ஆளுநர் இதை கருத்தில் கொண்டு மத்திய அரசிடம் பேசிய நிதி வாங்கி தர வேண்டும் என அன்பாக கேட்டுக்கொள்கிறேன் என்றும் சபாநாயகர் அப்பாவு என்று சட்டமன்றத்தில் கேட்டுக் கொண்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது
 
ஆளுநரை அன்போடு கேட்டுக்கொள்கிறேன். உங்கள் மனதில் இருப்பதை நீங்கள் சொன்னீர்கள். இவ்வளவு பெரிய வெள்ளம், புயல் ஏற்பட்டிருக்கிறது ஒரு பைசா கூட தரவில்லை, பல லட்சம் கோடி ரூபாய் PM CARE FUND-ல் உள்ளது. 
 
இந்திய மக்களால் கணக்கிடப்படாத, கணக்கு கேட்க முடியாத பணத்தில் இருந்தாவது ₹50,000 கோடி ரூபாயை ஆளுநர் வாங்கி தந்தால் நன்றாக இருக்கும்.  சாவர்க்கர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல தமிழ்நாட்டு சட்டமன்றம் 
 
 முன்னதாக ஆளுநர் உரையை ஆளுநர் ரவி புறக்கணித்து அமைதியாக சட்டமன்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் அவர் வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு தான் வாசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  தமிழக சட்டமன்றத்தில் இதற்கு முன் நடந்திராத இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Mahendran