1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (19:01 IST)

என்னை கைது செய்ததில் ஆளுநர் மாளிகைக்கு பங்கு இருக்கிறது: ஹேமந்த் சோரன்!

Hemant Soren
என்னை கைது செய்ததில் ஆளுநர் மாளிகைக்கு பங்கு இருக்கிறது என முன்னாள் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர்  ஹேமந்த் சோரன் கூறியுள்ளார்.
 
அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட ஜார்கண்ட் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன்ன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனை அடுத்து அவருக்கு பதிலாக  சாம்பாய் சோரன்  முதலமைச்சராக பதவியேற்றார் என்பதும் அவரது அரசு இன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில்  தன்னுடைய கைது குறித்து ஹேமந்த் சோரன் கூறிய போது ஜனவரி 31ஆம் தேதி இந்திய வரலாற்றில் ஒரு கருப்பு நாள். ஒரு மாநிலத்தின் முதல்வரான என்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். எனது கைதில் ஆளுநர் மாளிகைக்கும் பங்கு இருப்பது தெரியவருகிறது. என் மீது 8.5 கோடி ரூபாய் நில மோசடி புகார் கூறப்படுகிறது. அந்த குற்றத்தை நிரூபித்தால் நான் அரசியலில் இருந்து விலகுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva