தொடர்புடைய செய்திகள்
- நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! சபாநாயகர் அப்பாவு நேரில் ஆய்வு.!!
- 33 மாத ஆட்சியில் ஒப்பந்தங்களின் மூலம் 8.65 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது- தமிழ்நாடு அரசு
- கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பினை அளிக்கும்” -முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
- தமிழ்நாடு ஆசிரியர் பணி தேர்வில் தெலுங்கு, உருது மொழிகள்! – அரசாணை வெளியீடு!
- பிப்.12-ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! பிப்.19-ல் பட்ஜெட் தாக்கல்.! சபாநாயகர் அப்பாவு..!!
அரசின் உரையைப் படிக்காமல் அவையில் அமைதியாக அமர்ந்த ஆளுனர் ரவி.. அப்பாவு செய்த அதிரடி..!
தமிழக சட்டசபை இன்று கூடிய நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் அமைதியாக அமர்ந்திருப்பதாகவும் இதனை அடுத்து ஆளுநருக்கு பதிலாக அந்த உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் இன்று கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் புறக்கணித்ததாகவும் அவர் அமைதியாக சட்டமன்றத்தில் உட்கார்ந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தேசிய கீதம் முதலிலும் இறுதியிலும் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் வேண்டுகோள் விடுத்ததாகவும் கூறப்பட்டது
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் உரையை படிக்காமல் ஆளுநர் அவையில் அமைந்திருக்கும் நிலையில் சட்டப்பேரவையில் ஆளுநர் ரவி வாசிக்க வேண்டிய உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த உரையில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை சபாநாயகர் பட்டியல் இட்டு வருகிறார். தமிழ்நாடு அரசின் உரையை ஆளுநர் புறக்கணித்ததால் சட்டமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Edited by Mahendran
