வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (07:47 IST)

ப சிதம்பரத்தை அட்டாக் செய்ய சிவகெங்கை வரும் அமித்ஷா.. தொண்டர்கள் உற்சாகம்..!

Amitshah
இன்னும் சில நாட்களில் பாஜக டெல்லி தலைவர்கள் தமிழகத்திற்கு படையெடுக்க போகிறார்கள் என்றும் குறிப்பாக அமைச்சரின் தேர்தல் பிரச்சார பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது

அமித்ஷாவின் முதல் தேர்தல் பிரச்சாரம் சிவகங்கையில் ஆரம்பிக்க இருப்பதாகவும் அவருடைய முதல் அட்டாக் ப. சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்திக் சிதம்பரம் என்றும் கூறப்படுகிறது.

காலங்காலமாக ஒரே தொகுதியை புத்தகத்தை எடுத்துக் கொண்டிருக்கும் சிதம்பரம் குடும்பத்தினரை முதலில் அட்டாக் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்பதே அமித்ஷாவின் எண்ணமாக உள்ளது என்றும் குறிப்பாக அவர்களுடைய டார்கெட் எல்லாமே காங்கிரஸ் கட்சியாக தான் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

சிவகங்கை அடுத்து மதுரை, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் அமித்ஷா பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் சென்னையில் பிரச்சாரம் செய்வதற்கு முக்கிய காரணம் தமிழிசை சௌந்தர்ராஜன் தான் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஒரே ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டாலும் பாஜக தலைவர்கள் தனது தொகுதிக்கு வந்து பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விட்டதாகவும் ஆனால் அந்த கோரிக்கையை பாஜக கண்டு கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

Edited by Siva