1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 8 ஏப்ரல் 2024 (17:59 IST)

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்..! டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாள் விடுமுறை.! எப்போது தெரியுமா..?

Tasmac
மக்களவை தேர்தலை ஒட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. பொதுவாக தேர்தல் நடைபெறும் சமயத்தில் மதுபானக் கடைகள் மூடப்படுவது வழக்கம்.

இதையடுத்து, தமிழ்நாட்டில் வரும் 17, 18 மற்றும் வாக்குப்பதிவு நடைபெறும் 19ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் நாளான ஜூன் நான்காம் தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட நாட்களில் டாஸ்மாக் கடைகள், பார்களை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.