ட்ரக் உதயநிதி.. பியர் உதயநிதி.. டாஸ்மாக் உதயநிதி.. சரமாரியாக பெயர் வைத்த அண்ணாமலை..!
இன்னொரு முறை பாரத பிரதமரை 29 பைசா மோடி என்று உதயநிதி கூப்பிட்டால் அவரை நாங்கள் ட்ரக் உதயநிதி.. பியர் உதயநிதி.. டாஸ்மாக் உதயநிதி என்று கூப்பிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமைச்சர் உதயநிதி கடந்த சில நாட்களாக தேர்தல் பிரச்சார மேடைகளில் பிரதமர் மோடியை 29 பைசா மோடி என்று பெயர் வைத்து அழைத்துக் கொண்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செய்தியாளர் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தால் அண்ணாமலை இன்னொரு முறை பிரதமரை 29 காசு மோடி என்று கூறினால் உதயநிதியை நாங்கள் ட்ரக் உதயநிதி.. பியர் உதயநிதி.. டாஸ்மாக் உதயநிதி என்று கூறுவோம்.
மரியாதைக்காக நாங்கள் அமைதியாக இருக்கிறோம், எங்கள் அமைதியை சோதிக்க கூடாது, இன்னும் பல பெயர்கள் நாங்கள் உதயநிதிக்காக வைத்திருக்கிறோம் அவற்றை நாங்கள் வெளியே சொல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்
இதனை அடுத்து 29 பைசா மோடி என்று சொல்வதை உதயநிதி நிறுத்துவாரா அல்லது தொடர்ந்து பேசினால் பாஜகவினர் பதிலடி கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva