1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Sophia bail petition at 12 pm today

சோபியா ஜாமீன் மனு மதியம் 12 மணிக்கு் ஒத்திவைப்பு

sophia
சென்னையில் இருந்து தூத்துகுடிக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் விமானத்தில் சென்றபோது 'பாசிச பாஜக ஒழிக' என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மாணவி ஷோபியா மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் சோபியாவின் ஜாமீன் மனுவை அவரது தந்தை சாமி என்பவர் தூத்துகுடி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை சற்றுமுன் நடந்தபோது இந்த மனு இன்று மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக நீதிபதி அறிவித்தார். எனவே இன்னும் ஒரு மணி நேரத்தில் சோபியாவுக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது குறித்து தெரியவரும்.

இந்த நிலையில் சோபியா கைது விவகாரம் அகில இந்திய அளவில் பாஜகவுக்கு அவப்பெயரை தந்துள்ளது. பாஜகவுக்கு எதிராக அனனத்து மொழிகளிலும் ஹேஷ்டேக் உருவாக்கி அவை டிரெண்டில் இருப்பதால் இந்த விஷயத்தை இத்துடன் முடித்து கொள்வதே பாஜகவுக்கு நல்லதாக இருக்குக்ம் என கருதப்படுகிறது
அடுத்த கட்டுரையில்
இரு சக்கர வாகனத்தில் குன்றத்தூரையே வலம் வந்த அபிராமி