வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 செப்டம்பர் 2018 (07:53 IST)

கைதான சோபியாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு: மருத்துவமனையில் அனுமதி

விமானத்தில் நடுவானில் தமிழிசை செளந்திரராஜனுடன் வாக்குவாதம் செய்ததால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சோபியா என்ற இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள் சோபியாவுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், சிகிச்சை முடிந்த பின்னர் அவர் மீண்டும் சிறைக்கு அழைத்து செல்லப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

முன்னதாக சோபியா மீது பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் விதமாக செயல்படுதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், அவரை 15 நாள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சோபியாவின் கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சமூக ஆர்வலர்களும், நெட்டிசன்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்