1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 29 ஜூன் 2021 (22:06 IST)

சூரப்பா மீது விசாரணை நிறைவு! அடுத்த வாரம் அறிக்கை தாக்கல்!

முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது மோசடி குற்றச்சாட்டு சுமத்தி இருந்த நிலையில் அது குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் விசாரணை முடிவடைந்து விட்டதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது 
 
முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீதான விசாரணை நிறைவு பெற்றதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களில் நீதிபதிக கலையரசன் குழு அறிக்கை தயாரித்து உள்ளதாகவும் இந்த அறிக்கை வரும் வாரத்தில் முதலமைச்சரிடம் கலையரசன் குழு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது
 
அண்ணா பல்கலையில் பேராசிரியர் உள்பட பல்வேறு பணி நியமனங்களில் சூரப்பா முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது