தொடர்புடைய செய்திகள்
- நாங்க சுந்தரா ட்ராவல்ஸ் இல்ல.. உங்கள முடிச்சு விடப் போற ட்ராவல்ஸ்! - திமுகவிற்கு ஆர்.பி.உதயக்குமார் பதில்!
- அதிமுக கூட்டணி குறித்து நிர்வாகிகள் யாரும் பேச வேண்டாம்: தவெக தலைவர் விஜய்
- சனாதன கருத்தியலை அழித்தொழிப்பதே அறம்சார் அரசியல்.. கமல்ஹாசன் சந்திப்புக்கு பின் திருமாவளவன்..!
- விஜய் கட்சியுடன் கூட்டணியா? என்ற கேள்வி.. ‘சொல்ல முடியாது’ என பதில் சொன்ன எடப்பாடி பழனிசாமி..!
- தப்பை தட்டிக்கேட்ட DSPயிடம் காரை பிடுங்கி இருக்காங்க! - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!
ஈபிஎஸ் அவராக பேசவில்லை, அவரை யாரோ பேச வைக்கிறார்கள்: திருமாவளவன்
திமுகவின் கூட்டணி கட்சிகளை எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து விமர்சனம் செய்வது குறித்து கருத்து தெரிவித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், "எடப்பாடி பழனிசாமி தானாக பேசவில்லை என்றும், அவரை யாரோ பேச வைக்கிறார்கள் என்றுதான் புரிந்துகொள்ள முடிகிறது" என்றும் கூறியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமாவளவன் மேலும் கூறுகையில், "மக்களைச் சந்திக்கும்போது மக்களுக்கான கோரிக்கைகளை எடப்பாடி பழனிசாமி பேசுவதில்லை. அதற்கு பதிலாக, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பது, திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சனம் செய்வது என்ற நிலையில்தான் அவரது பேட்டிகளும் பேச்சுக்களும் உள்ளன. இதை வைத்து பார்க்கும்போது, அவரை பின்னாலிருந்து யாரோ இயக்குகிறார்கள் என்பதைபுரிந்துகொள்ள முடிகிறது" என்று தெரிவித்தார்.
கும்மிடிப்பூண்டி அருகே நடந்த சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்தும் திருமாவளவன் தனது கவலையை வெளிப்படுத்தினார். "10 நாட்கள் ஆகியும் இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளியை கைது செய்ய வேண்டும்" என்றும் அவர் வலியுறுத்தினார்.
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
