வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 டிசம்பர் 2021 (08:46 IST)

சென்னையில் இருந்து செல்லும் பல ரயில்கள் ரத்து: என்ன காரணம்?

இன்று சென்னையில் இருந்து செல்லும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பயணிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
காட்பாடி அருகே பாலம் ஒன்று பழுது அடைந்து இருப்பதாகவும் அந்த பாலத்தை சரிசெய்யும் முயற்சியில் ரயில்வே துறை அதிகாரிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து கேரளா, பெங்களூர் மற்றும் கோவை செல்லும் ஒரு சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று ரயில்வே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. 
 
ரத்து செய்யப்பட்ட ரயில்களின் விவரங்களை ரயில்வேயின் இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காட்பாடி அருகே பாலம் பழுது அடைந்ததால் சென்னையில் இருந்து செல்லும் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.