திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 15 டிசம்பர் 2021 (14:36 IST)

ஆற்றுப்பாலத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 9 பேர் பலி

ஆந்திர மாநிலம் கோதாவரியில் ஆற்றுப்பாலத்தில் இருந்து ஒரு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 9 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்திற்கு அருகேயுள்ள ஜல்லேறு என்ற ஆற்றுப்பாலத்தில் சென்று கொண்டிருந்த  ஒரு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுப்பாலத்தில் இருந்து  கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் ஓட்டுநர் உள்ளிட்ட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தற்போது மீட்புப் பணிகள் நடந்து வரும் நிலையில், 30 மேற்பட்ட பணிகள் இப்பேருந்தில் பயணித்ததாகக் கூறப்படுகிறது.