செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 15 ஏப்ரல் 2021 (10:51 IST)

மதுப்பாட்டிலில் இறந்து கிடந்த பாம்பு; கட்டிங் போட்ட பிறகு கண்டறிந்த மதுப்பிரியர்!

அரியலூரில் டாஸ்மாக் கடையில் வாங்கிய மதுபான பாட்டிலில் பாம்பு இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளியான சுரேஷுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் வழக்கம்போல சுத்தமல்லி டாஸ்மாக் கடையில் மதுபானம் வாங்கிய சுரேஷ் அதை திறந்து முதலில் ஒரு கட்டிங் குடித்துள்ளார்.

பின்னர் மீத மதுவையும் குடிக்க பாட்டிலை எடுத்தபோது உள்ளே பாம்பு குட்டி ஒன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை தொடர்ந்து அவருக்கு மயக்கம் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து தனது குடும்பத்தினரிடம் அவர் தெரிவிக்க உடனே அவர்களை அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.